மார்லன் பிராண்டோ
மார்லன் பிராண்டோ Marlon Brando | |
---|---|
பிறப்பு | 3 ஏப்பிரல் 1924 ஒமாகா |
இறப்பு | 1 சூலை 2004 (அகவை 80) லாஸ் ஏஞ்சலஸ் |
கல்லறை | தாகித்தி, சாவுப் பள்ளத்தாக்கு |
படித்த இடங்கள் |
|
பணி | திரைப்பட நடிகர், இயக்குனர் |
பாணி | மேற்கத்திய (வகை) |
வாழ்க்கைத் துணை/கள் | Anna Kashfi, Movita Castaneda, Tarita Teriipaia |
குடும்பம் | Jocelyn Brando |
விருதுகள் | Theatre World Award, Golden Globe Award for Best Actor – Motion Picture Drama, Primetime Emmy Award for Outstanding Supporting Actor in a Miniseries or a Movie, star on Hollywood Walk of Fame, Golden Globe Award for Best Actor – Motion Picture Drama |
இணையம் | http://marlonbrando.com/ |
கையெழுத்து | |
மார்லன் பிராண்டோ (பிறப்பு: ஏப்ரல்-3-1924- மறைவு: ஜூலை-1-2004) த காட்ஃபாதர், அப்போகலிப்ஸ் நவ், ஆன் த வாட்டர் பிரண்ட் உட்பட பல படங்களில் நடித்த திரைப்பட நடிகர். இருபதாம் நூற்றாண்டின் தலை சிறந்த நடிகர்களில் ஒருவராகக் கருதப்படுகிறார். இரு தடவை ஆஸ்கார் விருது வென்றார். அமெரிக்காவின் நெப்ரஸ்காவில் பிறந்தவர். 2004 இல் எண்பது வயதில் மரணமானார். ஒரு நடிகராக மட்டுமல்லாது, சமூகச் செயற்பாட்டாளராகவும் விளங்கினார்.அமெரிக்கத் திரைப்பட நிறுவனம் 1950 ஆம் ஆண்டுக்கு முன் நடித்த திரைப்பட கதாநாயகர்கள் சிறந்த கதாநாயகர்களில் நான்காவது மிக பெரிய கதாநாயகன் என்ற இடத்தை அடைந்தார் .அமெரிக்க திரைபடத்தின் மிக முக்கியமான நடிகர்களில் இவரும் ஒருவர் ஆவர் .1999ஆம் ஆண்டு டைம்ஸ் நாளிதழ் வெளியிட்ட நூற்றாண்டின் சிறந்த மனிதர்கள் என்ற பட்டியலில் இடம் பெற்ற திரைத்துறையினர் சார்லி சாப்ளின் ,மர்லின் மன்றோ ,மற்றும் மார்லன் பிராண்டோ ஆகும் .அதில் மார்லன் பிராண்டோ மட்டும் தான் நடிப்பு துறையில் வெகு ஆண்டுகாலம் உள்ளவர் . 2004ஆம் ஆண்டு உயிர் நீத்தார். அவர் இறக்கும் போது ஒரு எஸ்டேட்டை விட்டுச் சென்றார். அதன் மதிப்பு 21.6 மில்லியன் டாலராகும் .பிராண்டோவின் அந்த எஸ்டேட் இன்றும் வருடத்திற்கு 9 மில்லியன் டாலர் அவருக்குப் பெற்று தருகிறது என்று போர்பஸ் நிறுவனம் திரட்டிய தரவில் உள்ளது .இறந்த பிறகும் அதிகம் சம்பாதிக்கும் பிரபலங்களில் இவரும் ஒருவர் ஆவார்.இன்றும் அமெரிக்காவின் திரையுலகில் மார்லன் பிராண்டோ ஒரு கலாச்சார உருவமாக கருதப்படுகிறார்.மேலும் பலருடைய திரை வாழ்க்கை .திரை வாழ்க்கை பற்றிய ஒரு அளவுகோல் .திரைவாழ்க்கை பிரண்டோவிற்கு முன் பிரண்டோவிற்கு பின் என இரண்டாக பிரிக்கலாம். நடிகர் ஜாக் நிகோல்சொன் இவரை பற்றி குறிப்பிடுகையில் பிராண்டோ இறந்த பின்பு தான் எல்லோரும் முதல் இடத்திற்கு வர முடியும் என்று குறிப்பிட்டார் [1]
இளமைக்கால வாழ்க்கை
[தொகு]மார்லன் பிராண்டோவின் தந்தை ஒரு பூச்சிக்கொல்லி உற்பத்தியாளராக விளங்கியவர். இவருடைய வம்சாவளி ஜெர்மானிய, டச்சு, ஆங்கிலேய மற்றும் ஐரிஷ் ஆகியவைகளின் கலவையாக அமைந்தது. இவருடைய தந்தை வழி பாட்டனார் ஜெர்மனியிலிருந்து நியூயார்க் நகரில் குடியேறினார். பிராண்டோவின் தாய், டோரோத்தி ஜூலியா ஒரு நடிகையாக இருந்தவர். அதீத குடிப்பழக்கம் உடையவராக இவரது தாய் விளங்கினாள். சிறுவயதிலேயே பிராண்டோ அடுத்தவர்களைப் பார்த்து அதைப் "போலச் செய்வதில்" சிறந்தவராக இருந்தார். பண்ணையில் உள்ள மாடு மற்றும் குதிரைகளைப் பார்த்து அவற்றைப் போலச் செய்து காட்டுவார். பிராண்டோவின் இரண்டு மூத்த சகோதரிகளில் ஜோசலின் பிராண்டோ தான் முதலில் நடிப்புத் துறையில் நுழைந்தவர்.பிராண்டோவின் தங்கை ஜோசெய்ல்ன் பிராண்டோவை பற்றி எடுக்கப்பட்ட ஒரு ஆவணப்படத்தில் பின் வருமாறு கூறியுள்ளார் " பிராண்டோ தனது பள்ளி பருவத்தில் ஒரு நாடகத்தில் நடித்தார் அதில் ஏற்பட்ட அனுபவம் அவருக்கு பெரும் மகிழ்ச்சியை ஏற்படுத்தியது .இதனால் இவர் நடிப்புத்துறையை தேர்ந்து எடுத்து படிப்தற்கு இந்த நிகழ்வே அடித்தளமாக அமைந்தது .அப்போது அவருக்கு வயது 18 என்றும் அவர் கூறிப்பிட்டார்[2]
தி காட்பாதர் திரைபடம்
[தொகு]1972ஆம் ஆண்டு வெளிவந்த ஒரு மாபியா கிரைம் திரைப்படம் தி காட்பாதர்.இந்த படம் இவருடைய வாழ்கையில் ஒரு பெரும் திருப்புமுனை ஏற்படுத்தியது .இந்த படம் மரியோ புஜோ என்பவரால் எழுதப்பட்ட ஒரு புதினம் .அந்த புதினத்தை தழுவி எடுக்கபட்டது இந்த படம் .இந்த படத்தில் இவர் நியூயார்க் மாகாணத்தின் மிக பெரிய நிழல் உலக சாம்ராஜ்யத்தின் தலைவர் என்று அழைகப்படும் டான் விடோ கோறேலேனே ஆகா நடித்து இருப்பர் இந்த படம் 77 நாட்கள் படமெடுக்க பட்டது.இந்த படத்திற்கு ஆனா இசை நினோ ரொட்ட என்பவரால் தயாரிக்க பட்டது .இந்த படம் பல அகாடமி விருதுகளை பெற்றது அதில் சிறந்த நடிகருக்கான அகாடமி விருது இந்த திரைபடத்தின் மூலம் இவருக்கு கிடைத்தது .பல கோல்டன் குளோப் விருதுகளையும் பெற்றது .அதில் சிறந்த நடிகருக்கான கோல்டன் குளோப் விருது இவருக்கு இந்த திரைப்படத்திற்காக வழங்கபட்டது .[3]
சூப்பர்மேன் திரைப்படம்
[தொகு]1978ஆம் ஆண்டு இந்த திரைப்படம் வெளிவந்தது இந்த படத்தில் இவர் மக்கள் மனதை கொள்ளை கொண்ட ஒரு சுபெர்ஹீரோ வாக இருந்த சூப்பர்மேன் கதாபாத்திரத்தின் தந்தை வேடத்தில் நடித்து இருப்பர் .[4]
ஆஸ்கார் விருது புறக்கணிப்பு
[தொகு]ஆஸ்கார் விருது என்பது திரபடதுரையில் கிடைக்கும் ஒரு மிக உயர்ரிய விருது .இந்த விருது இவருக்கு 1954ஆம் ஆண்டு இவர் நடித்த ஆன் த வாடர்பிரன்ட் என்ற திரைப்படத்திற்காக இவருக்கு பரிந்துரைகபட்டது.ஆஸ்கார் விருதுக்கு இவர் தேர்வானதும் அதை அறிவிக்கும் நிகழ்வின் பொது அதை ஏற்க மறுத்து விட்டார் அதற்கு அவர்கொடுத்த காரணம் அன்றைய அமெரிக்க இந்தியர்கள்(செவிந்தியர்கள்) நடத்தப்படும் முறை தனக்கு பிடிக்கவில்லை என்பதே.
ஆன் த வாடர்பிரன்ட் திரைப்படம்
[தொகு]1954ஆம் ஆண்டு இந்த திரைப்படம் வெளிவந்தது இந்த படம் கடற்கரை ஓரத்தில் வசிக்கும் மாலுமிகள் மற்றும் துறைமுக தொழிலாளிகளின் வழக்கை மற்றும் அவர்களின் சங்கம் அதில் நடைபெரும் வன்முறைகள் பற்றிய படம் ஆகும்.இந்த படம் 12 அகாடமி விருதுகளுக்கு பரிந்துரைகபட்டது அதில் 8 விருதுகளை வென்றது .1997ஆம் ஆண்டு அமெரிக்காவின் மிக சிறந்த திரைப்படங்களின் பட்டியலில் 8ஆம் இடத்தை பிடித்தது .இந்த படம் 36 நாட்களில் படம் ஆகபெற்றது .ஹோபோகேன் நியூ ஜெர்சி மாகாணத்தில் பல இடங்களில் படமாக்கபட்டது.தேசிய திரைப்பட பதிவேட்டில் பதிவு செய்ய இந்த படம் அமெரிக்காவின் நூலக காங்கிரஸ் பரிந்துரைத்தது .வாடிகனில் 1995 ஆம் ஆண்டு தேர்வு செய்ய பட்ட சிறந்த 45 படங்களிலும் இது ஒன்றாக கருத படுகிறது சிறந்த நடிகருக்கான அகாடமி விருது இவருக்கு இந்த படத்திற்காக இவருக்கு வழங்கப்பட்டது.
விவா சபதா திரைப்படம்
[தொகு]1954 ஆம் ஆண்டு வெளிவந்த ஒரு தனிமனிதனுடைய வழக்கை பற்றிய படம் இந்த கதியின் நாயகனாக பிராண்டோ நடித்தார் .இந்த கதையில் இவர் ஒரு சாதாரண ஏழை விவசாயி முதல் எப்படி வல்லமை பொருந்திய ஒருவராக மெச்சிய புரட்சியாளர்கள் வரிசையில் இடம்பெறுகிறார். இந்தப் படம் ஒரு கற்பனை கலந்த மெச்சிய புரட்சியாளர் பற்றியது ஆகும் .இந்த படம் மற்றும் படத்தில் நடித்தவர்களுக்கு அகாடமி விருது, கோல்டன் குளோப் விருது, கேன்ஸ் திரைப்படவிருது போன்ற பல விருதுகளுக்கு பரிந்துரைக்கப்பட்டது. அதில் சில விருதுகளையும் பெற்றனர் இந்தப் படம் கொலராடோ,டேசேஸ் ,நியூ மேக்சிகோ போன்ற இடங்களில் படம் எடுக்கபட்டது.
தி பார்முலா திரைப்படம்
[தொகு]1980ஆம் ஆண்டு வெளி வந்த இந்த திரைப்படம் ஒரு கச்சா எண்ணெய் விலைஉயர்வை அடைந்து அதனால் சர்வதேச பொருளாதாரம் நிலைகுலைந்தது மற்றும் படிம எரிபொருட்களை விலையும் உயர்ந்து அதனால் சர்வதேச நிதி சந்தை குலைந்து விட்டது இதனைப் பற்றி வெளிவந்த முதல் திரைப்படம் இதுவாகும் .மிக மோசமான நடிகருக்கான கோல்டன் ராச்ப்பெர்ரி விருது இந்தப் படத்திற்காக பிரண்டோவிற்கு வழங்கப்பட்டது .
வெளி இணைப்புகள்
[தொகு]- ↑ "காப்பகப்படுத்தப்பட்ட நகல்". Archived from the original on 2011-07-18. பார்க்கப்பட்ட நாள் 2013-12-31.
- ↑ https://en.wikipedia.org/wiki/Marlon_Brando
- ↑ https://en.wikipedia.org/wiki/The_godfather
- ↑ https://en.wikipedia.org/wiki/Superman_(1978_film)
- ஆங்கிலத் திரைப்பட நடிகர்கள்
- 1924 பிறப்புகள்
- 2004 இறப்புகள்
- ஆங்கில அமெரிக்கர்கள்
- சிறந்த நடிகருக்கான அகாதமி விருதை வென்றவர்கள்
- அமெரிக்கத் திரைப்பட இயக்குநர்கள்
- அமெரிக்க ஆண் தொலைக்காட்சி நடிகர்கள்
- இருபதாம் நூற்றாண்டு அமெரிக்க ஆண் நடிகர்கள்
- இருபத்தொராம் நூற்றாண்டு அமெரிக்க ஆண் நடிகர்கள்
- அமெரிக்க ஆண் திரைப்பட நடிகர்கள்
- ந.ந.ஈ.தி நபர்கள்